Images
  • athlete
    (படம்: XYZ Photos)

முன்னாள் பயிற்றுவிப்பாளர் தம்மிடம் தவறாக நடந்துகொண்டதாக தேசிய ஓட்டப்பந்தய வீராங்கனை புகார்

சிங்கப்பூர்: தேசிய ஓட்டப்பந்தய வீராங்கனை கெர்ஸ்டின் ஓங் (Kerstin Ong), முன்னாள் பயிற்றுவிப்பாளர் தம்மிடம் தவறாக நடந்துகொண்டார் என்று சிங்கப்பூர் விளையாட்டு மன்றத்திடம் புகார் செய்துள்ளார்.

முன்னாள் பயிற்றுவிப்பாளர் பேசிய வார்த்தைகளும், அவருடைய போக்கும் தமக்குச் சங்கடமாக இருந்தது என்று கூறினார் 20 வயது ஓங்.

சம்பவத்தைப் பற்றி சிங்கப்பூர் திடல்தட அமைப்பிடம் புகார் செய்தார் ஓங். சக விளையாட்டாளர்கள் அவரைக் குறைகூறிய பின்னர் காவல் துறையிடம் புகார் கொடுக்கத் தயங்கினார்.

சமூக ஊடகங்களில் பரவி வரும் #MeToo என்ற இயக்கத்தின் கீழ், ஹாங்காங் ஓட்டப்பந்தைய வீராங்கனை வேரா லுவி (Vera Lui) பத்தாண்டுக்கு முன் பயிற்றுவிப்பாளரால் மானபங்கம் செய்யப்பட்டதாகக் கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து தாமும் புகார் செய்ததாகக் கூறினார் ஓங்.

குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் பயிற்றுவிப்பாளரை பணியிலிருந்து நீக்கியுள்ளதாகவும், சம்பவம் குறித்த விசாரணை முடிந்துள்ளதாகவும்
சிங்கப்பூர் திடல்தட அமைப்பு தெரிவித்துள்ளது. 

உங்கள் கருத்து

Top