Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஜூரோங் வெஸ்ட் புளோக்கின் அடித்தளத்தில் 16 வயது இளையரின் சடலம்

ஜூரோங் வெஸ்ட் புளோக்கின் அடித்தளத்தில் 16 வயது இளையரின் சடலம் இன்று (ஜனவரி 12) கண்டெடுக்கப்பட்டது.

வாசிப்புநேரம் -
ஜூரோங் வெஸ்ட் புளோக்கின் அடித்தளத்தில் 16 வயது இளையரின் சடலம்

(படம்: Channel NewsAsia)

சிங்கப்பூர்: ஜூரோங் வெஸ்ட் புளோக்கின் அடித்தளத்தில் 16 வயது இளையரின் சடலம் இன்று (ஜனவரி 12) கண்டெடுக்கப்பட்டது.

ஜூரோங் வெஸ்ட் ஸ்டிரீட் 25இல் உள்ள புளோக் 276Dஇன் அடித்தளத்தில் இளையர் மாண்டுகிடப்பதாக பிற்பகல் சுமார் 3.40 மணிக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல் துறை தெரிவித்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்த அவசர முதலுதவி அதிகாரிகள் இளையர் மாண்டதை உறுதிசெய்தனர்.

அருகில் உள்ள பாலர் பள்ளியிலிருந்து தனது பிள்ளையை அழைத்து வர சென்றுகொண்டிருந்த வழிப்போக்கர் இளையர் தரையில் பேச்சு மூச்சின்றி கிடப்பதைப் பார்த்ததாகக் கூறினார். மாண்ட இளையர் பள்ளிச் சீருடையில் இருந்ததாக அவர் தெரிவித்தார்.

விசாரணை தொடர்கிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்