Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வயிற்று வலி, வாந்தி காரணமாக 14 நார்த்லேண்ட் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில்

யீஷுனில் உள்ள நார்த்லேண்ட் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 14 மாணவர்கள் வயிற்று வலி, வாந்தி காரணமாக நேற்று (ஜனவரி 11) மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

வாசிப்புநேரம் -
வயிற்று வலி, வாந்தி காரணமாக 14 நார்த்லேண்ட் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில்

(படம்: Google Street View)

சிங்கப்பூர்: யீஷுனில் உள்ள நார்த்லேண்ட் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 14 மாணவர்கள் வயிற்று வலி, வாந்தி காரணமாக நேற்று (ஜனவரி 11) மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

இரவு மணி சுமார் 10.20-க்குச் சம்பவம் பற்றித் தகவல் கிடைத்ததாக, சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

நோய்வாய்ப்பட்ட மாணவர்கள் KK மகளிர், சிறார் மருத்துவமனைக்கும் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்கும் கொண்டுசெல்லப்பட்டனர்.

மாணவர்கள் வயிற்றில் நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாகப் பள்ளி முதல்வர் திருவாட்டி டான் சியூ வூன் சேனல் நியூஸ்ஏஷியாவிடம் தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் பாதுகாப்பைக் கருதி பள்ளி உணவகம் சோதனைக்காக மூடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மாணவர்கள் இருந்த வகுப்பறைகளும், கழிப்பறைகளும் சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் பள்ளி முதல்வர் குறிப்பிட்டார்.

நோய்வாய்ப்பட்ட மாணவர்கள் உடல்நலம் தேறிவருவதாகவும், அது போன்ற வேறு புதிய சம்பவங்கள் ஏதும் புகார் செய்யப்படவில்லை என்றும் கூறினார் திருவாட்டி டான்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்