Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வழக்க நிலைக்குத் திரும்பியுள்ளது புக்கிட் பாஞ்சாங் இலகு ரயில் சேவை

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தடைபட்டிருந்த புக்கிட் பாஞ்சாங் இலகு ரயில் சேவை வழக்க நிலைக்குத் திரும்பியுள்ளது.

வாசிப்புநேரம் -
வழக்க நிலைக்குத் திரும்பியுள்ளது புக்கிட் பாஞ்சாங் இலகு ரயில் சேவை

(படம்: Channel NewsAsia)

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தடைபட்டிருந்த புக்கிட் பாஞ்சாங் இலகு ரயில் சேவை வழக்க நிலைக்குத் திரும்பியுள்ளது.

ஓட்டுநரில்லா ரயிலைக் குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தப் பயன்படுத்தப்படும் சமிக்ஞைக் கருவி, கியெட் ஹோங் (Keat Hong) ரயில் நிலையத்தில் பழுதானதைத் தொடர்ந்து அந்தப் பாதையில் சேவை பாதிக்கப்பட்டது.

பிற்பகல் ஒன்றே முக்கால் மணிக்கு தடைபட்ட ரயில் சேவை, மாலை ஆறரை மணியளவில் வழக்கநிலைக்குத் திரும்பியதாக SMRT நிறுவனம் தெரிவித்தது.

சேவைத் தடையைத் தொடர்ந்து இலவசப் பேருந்துச் சேவைகளுக்கும், இணைப்புப் பேருந்துச் சேவைகளுக்கும் SMRT ஏற்பாடு செய்தது. மேலும், அந்த சம்பவத்தினால் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு, அது மன்னிப்புக் கேட்டுக்கொண்டது.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்