Images
  • pm
    (படம்: Channel NewsAsia)

"ஆசியானின் மீள்திறனையும், புத்தாக்கதையும் வலுப்படுத்துவது சிங்கப்பூரின் நோக்கம்": பிரதமர் லீ

ஆசியான் நாடுகளுக்கு இடையிலான மீள்திறனை வலுப்படுத்துவதோடு, உறுப்பு நாடுகளின் புத்தாக்கத் திறனை மேம்படுத்துவதை சிங்கப்பூர் நோக்கமாகக் கொண்டிருக்கும் என்று பிரதமர் லீ சியென் லூங் தெரிவித்தார்.

சிங்கப்பூர் ஆசியானின் தலைமைத்துவத்தை இன்று (ஜனவரி 12) ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து அவர் அவ்வாறு தெரிவித்தார்.

முன்னர், 2007இல் சிங்கப்பூர் ஆசியானின் தலைமைத்துவத்தை ஏற்றது. மீண்டும் தலைமைத்துவத்தை ஏற்பதில் மிக்க மகிழ்ச்சி என்று பீஷான்-அங் மோ கியோ பூங்காவில் நடக்கும் ஆசியான் விழாக் கொண்டாட்டத்தில் பேசியபோது தெரிவித்தார் திரு லீ.

சிங்கப்பூரின் தலைமைத்துவத்தைக் குறிக்கும் வகையில் சிறப்பு ஆர்கிட் மலரும் அறிமுகம் செய்யப்பட்டது. Renanthera ASEAN 2018 என்று அழைக்கப்படும் அது, ஒற்றுமை, வலிமை, மீள்திறன் ஆகிய அம்சங்களைப் பிரதிபலிக்கும்.

பீஷான்-அங் மோ கியோ பூங்காவில் நடைபெறும் இன்றைய நிகழ்ச்சி ஆசியானின் பலதரப்பட்ட சாதனைகளையும் அதன் துடிப்பையும் எடுத்துக்காட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
 

உங்கள் கருத்து

Top