Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வந்துவிட்டன மாடுகள்...களைகட்டியது பொங்கல்

லிட்டில் இந்தியாவின் பொங்கல் ஒளியூட்டின் சிறப்பம்சங்களில் ஒன்று, கேம்பல் லேனுக்குக் கொண்டுவரப்படும் மாடுகள். 

வாசிப்புநேரம் -
வந்துவிட்டன மாடுகள்...களைகட்டியது பொங்கல்

(படங்கள்: நித்திஷ் செந்தூர்)

லிட்டில் இந்தியாவின் பொங்கல் ஒளியூட்டின் சிறப்பம்சங்களில் ஒன்று, கேம்பல் லேனுக்குக் கொண்டுவரப்படும் மாடுகள்.

உழவுத் தொழிலுக்கு மாடுகள் இன்றியமையாதவை. அவற்றைச் சிறப்பிக்கும் வகையில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

சிங்கப்பூரில் பெரிய அளவில் விவசாயம் செய்யப்படுவதில்லை. என்றாலும் ஒவ்வோர் ஆண்டும் மாட்டுப் பொங்கலுக்காக கேம்பல் லேனுக்கு மாடுகள் வரவழைக்கப்படுகிறன.

இன்று லிட்டில் இந்தியாவிற்கு வந்து சேர்ந்தன 3 பசுக்கள், ஒரு காளை, 2 கன்றுக்குட்டிகள், 2 ஆடுகள்.

விக்னேஷ் பால்பண்ணையிலிருந்து வரவழைக்கப்பட்ட இந்த மாடுகள் மூன்று மாதத்திலிருந்து மூன்று வயதுவரை உடையவை.

மாடுகளுக்காக கேம்பல் லேனில் சிறப்புத் தொழுவம் அமைக்கப்பட்டுள்ளது.

கணேசன், லட்சுமி, கருப்பாயி, தேவி என்று அழைக்கப்படும் மாடுகளை நீங்களும் சென்று பார்க்கலாம்! 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்