Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அசுத்தமான உணவை விற்பனை செய்ததற்காக லிட்டில் இந்தியாவில் ஓர் உணவகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

லிட்டில் இந்தியாவின் லெம்பு ரோட்டில் இயங்கி வந்த முகமதி உணவகம், அசுத்தமான உணவை விற்பனை செய்ததற்காக இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
அசுத்தமான உணவை விற்பனை செய்ததற்காக லிட்டில் இந்தியாவில் ஓர் உணவகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

(படம்: Google Street View)

சிங்கப்பூர்: லிட்டில் இந்தியாவின் லெம்பு ரோட்டில் இயங்கி வந்த முகமதி உணவகம், அசுத்தமான உணவை விற்பனை செய்ததற்காக இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளது.

தேசிய சுற்றுப்புற அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஆண்டில் அசுத்தமான உணவை விற்றதற்கு அந்த உணவகம் 12 குற்றப்புள்ளிகளைப் பெற்றுள்ளது.

ஒருமுறை அசுத்தமான உணவை விற்பனை செய்யும் குற்றத்துக்கு 6 குற்றப்புள்ளிகள் வழங்கப்படுகிறது.

முகமதி உணவகத்துக்கு $800 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

டோபி கோட் எக்ஸ்சேஞ் (Dhoby Ghaut Xchange) கடைத்தொகுதியில் இயங்கிவரும் "ஜஸ்ட் ஆஷியா" (Just Acia) உணவகமும் அசுத்தமான உணவை விற்ற சந்தேகத்தின் பேரில் இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளது.

12 அல்லது அதற்கும் மேலான குற்றபுள்ளிகளைப் பெறும் உணவகங்கள் இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரை மூடப்படலாம். அவற்றின் உரிமங்களும் ரத்து செய்யப்படலாம்.

உணவுத் தயாரிப்பில் ஈடுபடும் ஊழியர்கள் அடிப்படை உணவுச் சுகாதார பயிற்சியில் தேர்ச்சி பெற வேண்டும்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்