Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பதிப்புரிமைச் சட்டத்தை மீறியதற்கு Set-Top Box விற்கும் இரு நிறுவனங்கள் மீது விசாரணை

 Set-Top Box விற்கும் இரண்டு நிறுவனங்கள் பதிப்புரிமைச் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுள்ளன.

வாசிப்புநேரம் -
பதிப்புரிமைச் சட்டத்தை மீறியதற்கு Set-Top Box விற்கும் இரு நிறுவனங்கள் மீது விசாரணை

(படம்: TODAY)

சிங்கப்பூர்: Set-Top Box விற்கும் இரண்டு நிறுவனங்கள் பதிப்புரிமைச் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுள்ளன.

குற்றஞ்சாட்டப்பட்ட முதல் நிறுவனம், Set-Top Box விநியோகிக்கும் உள்ளூர் நிறுவனமான Synnex Trading.

அதன் இயக்குநர் ஜியா சியாவ்ஃபெங் (Jia Xiaofeng), பதிப்புரிமைச் சட்டத்தின் கீழ்,
பல குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார்.

மற்றொரு நிறுவனம், உள்ளூர் சில்லறை வர்த்தக நிறுவனமான
An Nahl.

அதன் இயக்குநர் அப்துல் நஜிப் அப்துல் அஸிஸும் (Abdul Nagib Abdul Aziz) குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார்.

தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஸ்டாரஹப், சிங்டெல், பொழுதுபோக்கு நிறுவனமான Fox Network குழுமம், காற்பந்துத் துறையின் பிரிமியர் லீக் ஆகியவற்றின் பதிப்புரிமையை மீறியதன் பேரில் அந்த இரண்டு நிறுவனங்களும் அவற்றின் இயக்குநர்களும் குற்றஞ்சாட்டப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.

Synnex Trading நிறுவனத்தின் இயக்குநர் ஜியா, அடுத்து, பிப்ரவரி இரண்டாம் தேதி நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுவார்.

An-Nahl நிறுவனத்தின் இயக்குநர், அடுத்து, இந்த மாதம் 26-ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுவார்.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்