Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

புதிய அறிவார்ந்த பேருந்து நிறுத்தம் அறிமுகம்

மேலும், காற்றைச் சுத்தம் செய்து, தூய்மையான குளிர்ந்த காற்றை இந்தப் பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் அனுபவிக்கலாம்.

வாசிப்புநேரம் -
புதிய அறிவார்ந்த பேருந்து நிறுத்தம் அறிமுகம்

(படம்: Junn Loh)

பேருந்திற்குக் காத்துக்கொண்டிருக்கும் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்த புதிய அறிவார்ந்த பேருந்து நிறுத்தம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

உலகத்திலேயே முதல் அறிவார்ந்த பேருந்து நிறுத்தமாகக் கருதப்படும் இது, Plaza Singapura கடைத்தொகுதிக்கு வெளியே அமைந்துள்ளது.

நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பேருந்து நிறுத்தும், சுற்றியிருக்கும் வெப்பத்தை 24 டிகிரி செல்சியசுக்கு குறைக்கும் ஆற்றல் கொண்டது.

மேலும், காற்றைச் சுத்தம் செய்து, தூய்மையான குளிர்ந்த காற்றை இந்தப் பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் அனுபவிக்கலாம்.

உலகத்திலேயே முதல் அறிவார்ந்த பேருந்து நிறுத்தமாக இந்தப் பேருந்து நிறுத்தம் கருதப்படுகிறது. இதில் இருக்கும் குளிரூட்டும் முறை, குளிர்சாதன பெட்டியை விட 70 விழுக்காடு அதிகமாக எரிசக்தியை சேமிக்கிறது.

அடுத்த 12 மாதங்களுக்கு பேருந்து நிறுத்தம் சோதனை செய்யப்படும். அதன் முடிவுகள் பின்னர் நில போக்குவரத்து ஆணையத்துடனும் மற்ற அரசாங்க அமைப்புகளுடனும் பகிர்ந்துகொள்ளப்படும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்