Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர் ஆயுதப் படை, ராணுவம் ஆகியவற்றுக்குப் புதிய தலைவர்கள்

மேஜர் ஜெனரல் மெல்வின் ஓங் தற்காப்புப் படைத் தளபதியாகவும் பிரிகேடியர் ஜெனரல் கோ சி ஹௌ தரைப்படைத் தளபதியாகவும் நியமிக்கப்படுவதாக இன்று அறிவிக்கப்பட்டது. 

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர் ஆயுதப் படை, ராணுவம் ஆகியவற்றுக்குப் புதிய தலைவர்கள்

(படம்:MINDEF)

சிங்கப்பூர் ஆயுதப் படை, ராணுவம் ஆகியவற்றுக்குப் புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேஜர் ஜெனரல் மெல்வின் ஓங் தற்காப்புப் படைத் தளபதியாகவும் பிரிகேடியர் ஜெனரல் கோ சி ஹௌ தரைப்படைத் தளபதியாகவும் நியமிக்கப்படுவதாக இன்று அறிவிக்கப்பட்டது.

43 வயது மேஜர் ஜெனரல் ஓங், தரைப் படைத் தளபதி பதவியிலிருந்து விலகி தற்காப்புப் படைத் தளபதியாகிறார்.

கடந்த 2015இல் அவர் தரைப்படைத் தளபதி பொறுப்பை ஏற்றார்.

தலைமைக் காவலர் அதிகாரி பதவியையும் வகித்துள்ள மேஜர் ஜெனரல் ஓங், 2011ஆம் ஆண்டு நியூசிலந்தில் இடம்பெற்ற சிங்கப்பூர் ஆயுதப் படை நிலநடுக்க நிவாரண முயற்சிகளை வழிநடத்தினார்.

மேஜர் ஜெனரல் ஓங்கிடமிருந்து தரைப்படைத் தளபதி பொறுப்பை, 40 வயது பிரிகேடியர் ஜெனரல் கோ ஏற்கிறார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்