Images
  • trains
    (படம்:  Channel NewsAsia)

வழக்கத்துக்கு முன்னதாக முடிவடையும் கிழக்கு-மேற்கு ரயில் சேவை

கிழக்கு-மேற்கு ரயில் பாதையில் உள்ள அனைத்து 35 நிலையங்களும் இன்றும் (மார்ச் 12), வரும் புதன்கிழமையும் மேம்பாட்டுப் பணிகளுக்காக இரவு 10.30 மணிக்கு மூடப்படும்.

வார நாட்களில் ரயில் சேவை, வழக்கத்துக்கு முன்னதாக முடிவடைவது இதுவே முதல் முறை.

ரயில் பயணத்தை பொதுமக்களுக்கு சுமுகமானதாக ஆக்கவேண்டும்.
அந்த இலக்குடன் மேம்பாட்டுப் பணிகளுக்குக் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதற்காக ரயில் சேவை வரும் ஜூன் மாதத்துக்கும் அப்பால், சில நாட்களில் முன்கூட்டியே முடிவடையும்.

ரயில் சேவை வழக்கத்துக்கு மாறாக முன்னதாகவே நிறுத்தப்படுவதை ஒட்டி பயணிகளுக்கு இணைப்புப் பேருந்துச் சேவைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பயணிகளுக்கு வழிகாட்ட, பணியாளர்கள் ரயில் நிலையங்களில் நிறுத்தப்படுவர். 

உங்கள் கருத்து

Top