Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

டௌன்டவுன் ரயில்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை முன்பு கணிக்கப்பட்டதை விடக் குறைவு

டௌன்டவுன் (Downtown) ரயில் பாதையின் முதல் கட்டம் திறக்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், முதலில் கணிக்கப்பட்ட எண்ணிக்கையை விடக் குறைவான பயணிகளே அதனைப் பயன்படுத்துகின்றனர்.

வாசிப்புநேரம் -
டௌன்டவுன் ரயில்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை முன்பு கணிக்கப்பட்டதை விடக் குறைவு

(படம்: Raj Nadarajan/TODAY)

டௌன்டவுன் (Downtown) ரயில் பாதையின் முதல் கட்டம் திறக்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், முதலில் கணிக்கப்பட்ட எண்ணிக்கையை விடக் குறைவான பயணிகளே அதனைப் பயன்படுத்துகின்றனர்.

வார நாள் ஒன்றுக்கு 500,000 பயணிகள் டௌன்டவுன் சேவைகளைப் பயன்படுத்துவர் என்று முன்பு கணிக்கப்பட்டிருந்தது.

ஆனால், ரயில் பாதையின் மூன்றாம் கட்டம் கடந்த அக்டோபரில் திறக்கப்பட்ட பின்னரும் கூட அந்த எண்ணிக்கை எட்டப்படவில்லை.

தற்போது அந்த எண்ணிக்கை, 470,000 ஆக உள்ளது.

மூன்றாம் கட்ட ரயில் பாதை திறக்கப்படுமுன் அந்த எண்ணிக்கை, 300,000 ஆக இருந்தது.

இவ்வாண்டு இறுதிக்குள், வார நாளில் அன்றாடம் டௌன்டவுன் சேவைகளைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை,
500,000க்கு உயருமென, நிலப் போக்குவரத்து ஆணையம் எதிர்பார்க்கிறது.

பேருந்தில் சென்று பழக்கப்பட்டவர்கள், ரயில் பயணத்துக்கு மாற சிலகாலம் பிடிக்கலாம்.

தேக்கமடைந்த மக்கள் தொகை காரணமாக, பொதுவாகவே பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை சென்ற ஆண்டு வளர்ச்சி பெறவில்லை என்பதைப் போக்குவரத்துத் துறை வல்லுநர்கள் சுட்டினர்.

கிராப், ஊபர் போன்ற தனியார் வாகனச் சேவை நிறுவனங்களின் வளர்ச்சியும்கூட, இதற்கு ஒரு காரணமாக இருக்கக்கூடும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்