Images
  • musk
    (படம்:  AFP)

செவ்வாய் கிரகத்திற்குப் பயணம் - முன்னோட்டப் பயணம் அடுத்த ஆண்டு சாத்தியமாகலாம்

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபலத் தொழிலதிபர் ஈலோன் மஸ்க், செவ்வாய் கிரகத்திற்குச் செல்லும் முன்னோடிச் சோதனைகள் அடுத்த ஆண்டின் முதல் பாதியில் தொடங்கலாம் என்று அறிவித்துள்ளார்.

அடுத்த உலகப் போர் வெடிப்பதற்கு முன் மனிதர்கள் செவ்வாய் கிரகத்திற்குக் குடியேறுவது அவசியம் என்று டெக்ஸஸ் மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கூறினார் திரு. மஸ்க்.

உலகளாவிய அணுவாயுதப் போர் மூண்டு, பூமியிலுள்ள உயிரினங்கள் முற்றாகத் துடைத்தொழிக்கப்படுமுன் மனிதர்கள் செவ்வாய் கிரகத்தில் குடிபுக வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

திரு. மஸ்க்-கின் விண்வெளி ஆய்வு நிறுவனமான SpaceX, கடந்த மாதம் Falcon Heavy என்ற உந்துகணையை வெற்றிகரமாகச் சோதித்துப் பார்த்தது.

செவ்வாய் கிரகத்தில் குடியிருப்பு ஒன்றைத் தோற்றுவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளார் திரு. மஸ்க்

பூமியைப் போல அல்லாமல் செவ்வாய் கிரகத்தில் வசிக்கவிருக்கும் மக்களுக்கு அதிக உரிமைகள் இருக்கும் எனத் தாம் நம்புவதாகக் கூறுகிறார் அவர்.  

உங்கள் கருத்து

Top