Images
  • esm
    (படம்:  Channel NewsAsia)

'எஃகு, அலுமினிய இறக்குமதிகளுக்கு விதிக்கப்படும் வரி நல்லதல்ல': கோ சொக் தோங்

எஃகு, அலுமினிய இறக்குமதிகளுக்கு அமெரிக்கா விதிக்கவிருக்கும் வரி, அனைத்துலக வர்த்தக முறையில் பெரிய அளவிலான மாற்றத்தை ஏற்படுத்தலாம் என ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சொக் தோங் (Goh Chok Tong) எச்சரித்துள்ளார்.

அந்த வரி, உலகிற்கு நல்லதல்ல என்று Facebook பதிவு ஒன்றில் அவர் தெரிவித்தார்.

குறிப்பாக, வர்த்தகத்தையும், தடையற்ற பொருளியல் சூழலையும் கொண்ட சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு அது பாதிப்பை ஏற்படுத்தும்.

அமெரிக்கா, இறக்குமதிக்கு வரி விதிக்கும் போக்கைத் தொடர்ந்தால், மற்ற பெரிய நாடுகளும் அவ்வாறு செய்யலாம் என்றார் திரு கோ. 

உங்கள் கருத்து

Top