Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பானங்களில் குறைவான சர்க்கரை கலக்கும் போக்கைக் கையாண்டு வரும் சிங்கப்பூரர்கள்

சிங்கப்பூர் பலதுறைத் தொழில்நுட்பக் கல்லூரியின் உணவகத்தில் பானங்கள் விற்பனை செய்யும் கடை, தான் பயன்படுத்தும் சர்க்கரையின் அளவை 60 விழுக்காடு குறைத்துள்ளது.

வாசிப்புநேரம் -
பானங்களில் குறைவான சர்க்கரை கலக்கும் போக்கைக் கையாண்டு வரும் சிங்கப்பூரர்கள்

(படம்: Kelly Ng/TODAY)

சிங்கப்பூர் பலதுறைத் தொழில்நுட்பக் கல்லூரியின் உணவகத்தில் பானங்கள் விற்பனை செய்யும் கடை, தான் பயன்படுத்தும் சர்க்கரையின் அளவை 60 விழுக்காடு குறைத்துள்ளது.

கடையில் விற்பனை செய்யப்படும் காப்பி, தேநீர் போன்ற பானங்களில் சர்க்கரை கலக்கப்படுவதில்லை. வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான சர்க்கரையைத் தாங்களாகவே சேர்த்துக் கொள்ளலாம்.

இதனால் அந்த உணவகத்தின் வாடிக்கையாளர்கள் பலர் பானங்களில் சேர்க்கும் சர்க்கரை அளவைக் கணிசமாகக் குறைத்துள்ளனர்.

சுகாதார மேம்பாட்டு வாரியத்துடன் சேர்ந்து நடத்தப்படும் இந்த முயற்சி அரசாங்க அலுவலங்கள், சமூக மன்றங்கள், விளையாட்டுத் தளங்கள், பூங்காக்கள் போன்ற இடங்களில் மே மாதம் விரிவுபடுத்தப்படவுள்ளது.

சுகாதார மேம்பாட்டு வாரியத்தால் நடத்தப்பட்ட சோதனையில், வாடிக்கையாளர்கள் தங்கள் பானங்களில் தாங்களாகவே சர்க்கரையைச் சேர்க்கும் போது, சர்க்கரைப் பயன்பாடு 75 விழுக்காடு குறைவதாகத் தெரியவந்தது.

பெரும்பாலான வாடிக்கையாளர்கள் கூடுதல் சர்க்கரை கலக்காத பானங்களில் திருப்தியடைவதாக, சுகாதார மேம்பாட்டு வாரியம் தெரிவித்தது.

நீரிழிவுக்கு எதிரான போராட்டத்தில் சிங்கப்பூர் உணவுப் பொருட்களில் உள்ள சர்க்கரையின் அளவைத் தெளிவாகக் குறிப்பிடும் முறையைச் சோதித்து வருகிறது.

பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் நிறங்களைக் கொண்டு உணவுப் பொருளில் உள்ள சர்க்கரையின் அளவைத் தெரிந்துகொள்ளும் முறையை தற்போது சிங்கப்பூரும் ஆராய்ந்து வருகிறது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்