Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

புத்தாக்கச் சிந்தனையை வளர்க்க ஓவியக் கல்வி முக்கியம்

வேகமாக மாறிவரும் யுகத்தில், ஆழ்ந்த சிந்தனையாற்றல், புத்தாக்கம், இணைந்து செயலாற்றுதல் போன்ற திறன்களைப் பெற்றிப்பது அவசியம் எனக் கல்வி ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 

வாசிப்புநேரம் -
புத்தாக்கச் சிந்தனையை வளர்க்க ஓவியக் கல்வி முக்கியம்

(படம்: Channel NewsAsia)

வேகமாக மாறிவரும் யுகத்தில், ஆழ்ந்த சிந்தனையாற்றல், புத்தாக்கம், இணைந்து செயலாற்றுதல் போன்ற திறன்களைப் பெற்றிப்பது அவசியம் எனக் கல்வி ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

உலகின் எந்த மூலையிலும் வாழ இன்றைய மாணவர்களுக்கு மீள்திறன், சூழலுக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்ளும் திறன், தொடர்புத் திறன் ஆகியவை அவசியம்.

தோல்வி, விமர்சனம் ஆகியவற்றை மாணவர்கள் எதிர்நோக்கும்போது, அவர்கள் அதனை ஆக்ககரகமாக எதிர்கொள்ள வேண்டும்.

ஓவிய வகுப்பறைகள் தன்முனைப்பையும் மீள்திறனையும் பிள்ளைகளிடையே வளர்க்க துணை புரிகின்றன.

பல்வேறு கல்வி ஆய்வுகள், ஓவியக் கல்வியின் நன்மைகளை எடுத்துக் கூறுகின்றன. எழுத்தறிவையும் ஆழ்ந்த சிந்தனைத் திறன்களையும் மேம்படுத்த ஓவியக் கல்வி உதவுவதாக Guggenheim அருங்காட்சியகம் நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்