Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

முன்னாள் செம்பவாங் அடித்தளத் தலைவர் மீது மோசடிக் குற்றச்சாட்டு

முன்னாள் செம்பவாங் அடித்தளத் தலைவர் Reichie Chng, 150க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். பல்வேறு ஏமாற்று, கையெழுத்து மோசடிக் குற்றங்களை அவர் புரிந்ததாக நம்பப்படுகிறது.   

வாசிப்புநேரம் -
முன்னாள் செம்பவாங் அடித்தளத் தலைவர் மீது மோசடிக் குற்றச்சாட்டு

((படம்: Reichie Chng Teck Kiam/Facebook)

முன்னாள் செம்பவாங் அடித்தளத் தலைவர் Reichie Chng, 150க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். பல்வேறு ஏமாற்று, கையெழுத்து மோசடிக் குற்றங்களை அவர் புரிந்ததாக நம்பப்படுகிறது.

அந்த மோசடிகளில் S$1.4 மில்லியனுக்கு மேற்பட்ட தொகை சம்பந்தப்பட்டிருந்ததாக நீதிமன்றப் பத்திரங்கள் தெரிவிக்கின்றன.

செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான திரு. ஓங் யீ காங்கின் பெயரைப் பயன்படுத்தி சிங் மோசடி செய்ததாகக் கூறப்பட்டது.

சிங், கடந்தாண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி, போலியான மின்-பதிவைச் செய்துள்ளார். தனக்கும் கல்வியமைச்சரான திரு.ஓங்கிற்கும் இடையே நடைபெற்ற WhatsApp கலந்துரையாடலை அவர் படமெடுத்துள்ளார். அமைச்சர் முதலீட்டுத் திட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக அந்தக் கலந்துரையாடல் அமைந்திருந்தது.

அந்த மின்-பதிவைச் செய்தது திரு. ஓங் என மற்றவர்களை ஏமாற்றுவதற்காக செங் அந்தப் பதிவை உருவாக்கியதாகக் கூறப்பட்டது.

ஏமாற்று வேலையிலும் கையெழுத்து மோசடியிலும் ஈடுபட்டிருப்பது நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் 10 ஆண்டு வரையிலான சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்