Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வரியைத் திரும்பப் பெறுதல் குறித்த மின்னஞ்சல் மோசடி - சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் எச்சரிக்கை

வரியைத் திரும்பப் பெறுதல் குறித்த மின்னஞ்சல் ஒன்றை நீங்கள் பெற்றிருக்கலாம். சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையத்தால் அனுப்பப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ள அந்த மின்னஞ்சல் ஒரு மோசடி என ஆணையம் எச்சரித்தது.

வாசிப்புநேரம் -
வரியைத் திரும்பப் பெறுதல் குறித்த மின்னஞ்சல் மோசடி - சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் எச்சரிக்கை

படம்: Channel NewsAsia

வரியைத் திரும்பப் பெறுதல் குறித்த மின்னஞ்சல் ஒன்றை நீங்கள் பெற்றிருக்கலாம். சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையத்தால் அனுப்பப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ள அந்த மின்னஞ்சல் ஒரு மோசடி என ஆணையம் எச்சரித்தது.

அந்த மின்னஞ்சலில் கணினிக் கிருமி இருக்கலாம் என்றும் ஆணையம் கூறியது. அந்த மோசடி மின்னஞ்சலைப் பெறுவோர், அதில் உள்ள இணைப்பைப் பதிவிறக்கம் செய்து அல்லது இணையப்பக்க முகவரிக்குச் சென்று மேல்விவரங்களைப் பெற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

சில மோசடி நபர்கள், ஆணையத்தின் பெயரைப் பயன்படுத்தி பொதுமக்களுக்கு மின்னஞ்சல், கடிதம், குறுஞ்செய்தி ஆகியவற்றை அனுப்புவதோடு தொலைபேசியிலும் அழைப்பதாக ஆணையம் அதன் இணையப்பக்கத்தில் தெரிவித்தது.

மற்ற வங்கிக் கணக்குகளுக்குப் பணத்தை மாற்றிவிடும்படி மோசடி நபர்கள் கூறுவர். தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரிகளிலிருந்து தான் அதிகாரபூர்வ மின்னஞ்சல்களை அனுப்புவதில்லை என ஆணையம் பொதுமக்களுக்கு நினைவூட்டியது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்