Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மதிப்பெண்ணுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரும் சமூகத்தை உருமாற்ற தற்போதைய திட்டங்கள் போதுமானவை அல்ல: டெனிஸ் புவா

கல்வியமைச்சு நல்ல திட்டங்களை அறிமுகம் செய்துள்ளபோதும் அவை மதிப்பெண்ணுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரும் சமூகத்தை உருமாற்றப் போதுமானவையாக இல்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் டெனிஸ் புவா கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -

கல்வியமைச்சு நல்ல திட்டங்களை அறிமுகம் செய்துள்ளபோதும் அவை மதிப்பெண்ணுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரும் சமூகத்தை உருமாற்றப் போதுமானவையாக இல்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் டெனிஸ் புவா கூறியுள்ளார். இருப்பினும் அதற்கு அமைச்சு மட்டுமே பொறுப்பல்ல என்று அவர் வலியுறுத்தினார்.
சேனல் நியூஸ்ஏஷியாவுக்கு அளித்த நேர்காணலில் அவர் அவ்வாறு கருத்துரைத்தார்.

மாற்றம் ஏற்பட ஒவ்வொருவரும் பங்களிக்கவேண்டும்.
கல்விக்கான அரசாங்க நாடாளுமன்றக் குழுத் தலைவருமான திருவாட்டி புவா, இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கல்வி அமைச்சுக்கான செலவின ஒதுக்கீடு குறித்த விவாதத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் குறித்துப் பேசினார்.

அமைச்சின் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ள 21ஆம் நூற்றாண்டுக்கான போட்டித்தன்மை அம்சங்கள், கூடுதல் கற்றல் போக்குகள் ஆகியவை குறித்து, விரைவில் துணிச்சலான, உருமாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்