Images
  • 13 year old boy assaulted (1)
    (படம்: TODAY)

13 வயதுச் சிறுவனைத் தாக்கி கொள்ளையடித்த சந்தேகத்தில் 46 வயது ஆடவர் கைது

புவாங்கோக் கிரீனில் (Buangkok Green) கடந்த செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 9), 13 வயதுச் சிறுவனைத் தாக்கி கொள்ளையடித்த சந்தேகத்தில் 46 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்நபர், சிறுவனுக்குக் காயங்கள் ஏற்படும் வகையில் நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

சிறுவனை அறைந்து அவனது கைத்தொலைபேசியைப் பறித்ததாக நம்பப்படுகிறது.

சம்பவம் நிகழ்ந்து 12 மணி நேரத்திற்குள் அந்த ஆடவர் புவாங்கோக் கிரெசண்டில் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறையினர் கூறினர்.

நாளை (அக்டோபர் 12) அந்தச் சந்தேக நபர் குற்றச்சாட்டப்படுவார் எனக் கூறப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபணமானால், அவருக்கு 5இலிருந்து 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் 12க்குக் குறையாத பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.


 

Top