Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஆர்ச்சர்ட் ரோட்டில் புகையற்ற பகுதிகளுக்குத் தயார் செய்ய வர்த்தகங்களுக்குக் கூடுதல் அவகாசம்

ஆர்ச்சர்ட் ரோட்டில் புகையற்ற பகுதிகளைச் செயல்படுத்தும் தேதி இன்னும் சுமார் ஆறு மாதங்களுக்குத் தள்ளி வைக்கப்படும் என்று தேசியச் சுற்றுப்புற அமைப்பு தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
ஆர்ச்சர்ட் ரோட்டில் புகையற்ற பகுதிகளுக்குத் தயார் செய்ய வர்த்தகங்களுக்குக் கூடுதல் அவகாசம்

(படம்: AFP)

சிங்கப்பூர்: ஆர்ச்சர்ட் ரோட்டில் புகையற்ற பகுதிகளைச் செயல்படுத்தும் தேதி இன்னும் சுமார் ஆறு மாதங்களுக்குத் தள்ளி வைக்கப்படும் என்று தேசியச் சுற்றுப்புற அமைப்பு தெரிவித்துள்ளது.

வர்த்தகங்கள், புகைபிடிப்பவர்களுக்குத் தனியாக இடம் ஒதுக்க அவகாசம் வழங்கும் நோக்கில் அது தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட இடங்களில் புகைபிடித்தலைக் கட்டுப்படுத்தும் சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்ட பிறகு புதிய தேதி இவ்வாண்டின் பிற்பாதியில் அறிவிக்கப்படும்.

ஆர்ச்சர்ட் ரோடு வட்டாரத்தில் புகையற்ற பகுதிகள் அறிமுகம் செய்யப்படும் என்று கடந்தாண்டு ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டது. அந்தச் சட்டம் அடுத்த மாதம் முதல் தேதி நடப்புக்கு வரும் என்று கூறப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து ஆர்ச்சர்ட் ரோடு கடைக்காரர்கள் சங்கமும், தேசியச் சுற்றுப்புற அமைப்பும் இணைந்து சட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வைக் கொண்டுவரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.

புகையற்ற பகுதிகளின் மூலம் சிகரெட் பிடிக்கும் பழக்கம் குறையும் என்பது நம்பிக்கை.

இதுவரை புகைபிடிப்பவர்களுக்கு சுமார் 40 இடங்கள் ஆர்ச்சட் சாலையில் ஒதுக்கப்பட்டுள்ளன, ஃபார் ஈஸ்ட் பிளாஸா, தி ஹீரன், ஆர்ச்சர்ட் டவர்ஸ் ஆகிய இடங்கள் அவற்றில் அடங்கும்.

தற்போது புகையற்ற பகுதிகளில் அமைந்துள்ள உணவகங்களில் உள்ள புகைபிடிக்கும் இடங்களை அகற்ற உணவகங்களுக்கு ஆறு மாத அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு ஜூன் மாதத்திலிருந்து தீவெங்கும் உணவகங்களில் புகைபிடிக்கும் இடங்களை நிறுவ சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களை தேசியச் சுற்றுப்புற அமைப்பு நிராகரித்து வருகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்