Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர்க் கடற்பகுதியில் கப்பல் விபத்து : இரண்டு சடலங்கள் மீட்பு

இந்தோனேசியக் கடல் பகுதியில் மேற்கொள்ளப்படும் தேடல், மீட்புப் பணியில் 5 இந்தோனேசியக் கப்பல்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர்க் கடற்பகுதியில் கப்பல் விபத்து : இரண்டு சடலங்கள் மீட்பு

(படம் : Brandon Tanoto)

 சிங்கப்பூர்க் கடற்பகுதியில் இன்று காலை இந்தோனேசியக் கப்பலுடன், மணல் தோண்டும் மிதவைக் கப்பல் மோதிய சம்பவத்தில் காணாமற் போன ஐவரில் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம் அதனைத் தெரிவித்தது.

(படம்:சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம் )

மற்ற மூவரைத் தேடி, மீட்கும் பணிகள் தொடர்கின்றன.

டொமினிக்கன் குடியரசில் பதிவு-செய்யப்பட்ட மணல் தோண்டும் மிதவைக் கப்பலில் 12 ஊழியர்கள் இருந்தனர்.

அவர்களில் 7 பேர் சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

சிகிச்சைக்குப் பிறகு 5 பேர் மருத்துவமனையிலிருந்து திரும்பினர்.

சம்பவம் குறித்து இந்தோனேசிய அதிகாரிகளுக்குத் தகவல் அளிக்கப்பட்டதாக ஆணையம் கூறியது.

இந்தோனேசியக் கடல் பகுதியில் மேற்கொள்ளப்படும் தேடல், மீட்புப் பணியில் 5 இந்தோனேசியக் கப்பல்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்