Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் தற்காலிகப் பொதுப் பயன்பாட்டு இடங்களாக மாறவிருக்கும் வாகன நிறுத்துமிடங்கள்

பொதுமக்கள் நடைப் பயிற்சி, சைக்கிளோட்டம் ஆகியவற்றில் உற்சாகமாக ஈடுபடுவதை ஊக்குவிப்பது அதன் நோக்கம் என்று நகரச் சீரமைப்பு ஆணையம் கூறியது.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் தற்காலிகப் பொதுப் பயன்பாட்டு இடங்களாக மாறவிருக்கும் வாகன நிறுத்துமிடங்கள்

(படம் : நகரச் சீரமைப்பு ஆணையம்)

லிட்டில் இந்தியா,பூகிஸ், கம்ப்பொங் கிலாம் வட்டாரச் சாலைகள் வரும் சனிக்கிழமை "PARKing Day"ஐ முன்னிட்டு போக்குவரத்துக்கு மூடப்படும்.

வாகன நிறுத்துமிடங்கள் அன்று தற்காலிகப் பொதுப் பயன்பாட்டு இடங்களாக மாற்றப்படும்.

நகரச் சீரமைப்பு ஆணையம் அவ்வாறு கூறியது.

வாகன நிறுத்துமிடங்களில் பொதுமக்களை உற்சாகப்படுத்தும் ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கான 85 நிலையங்கள் அமைக்கப்படும்.

அவற்றில் 8ஐ oBike, oFo, Mobike, SG Bike ஆகிய சைக்கிள்-பகிர்வு நிறுவனங்கள் அமைக்கும்.

பொதுமக்கள் அந்த வட்டாரத்தை இலவசமாகச் சுற்றிப்பார்க்க 95 சைக்கிள்கள் அங்கு வைக்கப்படும்.

சனிக்கிழமை காலை 10 மணி முதல் நள்ளிரவு வரை லியாங் சியா ஸ்திரீட்  போக்குவரத்துக்கு மூடப்படும்.

பொதுமக்கள் நடைப் பயிற்சி, சைக்கிளோட்டம் ஆகியவற்றில் உற்சாகமாக ஈடுபடுவதை ஊக்குவிப்பது அதன் நோக்கம் என்று நகரச் சீரமைப்பு ஆணையம் கூறியது.

சுல்தான் கேட்டின் ஒரு பகுதியும் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை போக்குவரத்துக்கு மூடப்படும் என்று ஆணையம் தெரிவித்தது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்