Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சாங்கி விமான நிலையத்தின் 2ஆம் முனையத்தில் தீச்சம்பவம்

லாரியின் பின் பகுதியில் இருந்த பொருட்களிலும் தீப்பிடித்தது. விமான நிலையத்தின் அவசரச் சேவைப் பிரிவு தீயை அணைத்தது.

வாசிப்புநேரம் -
சாங்கி விமான நிலையத்தின் 2ஆம் முனையத்தில் தீச்சம்பவம்

(படம்: AFP)

சாங்கி விமான நிலையத்தின் 2ஆம் முனையம், தீச்சம்பவத்தினால் இன்று பிற்பகல் தற்காலிகமாக மூடப்பட்டது.

கீழ்த்தளத்தில் நின்றுகொண்டிருந்த லாரியில் இருந்த சாதனம் ஒன்றில் தீப்பிடித்துக்கொண்டது.

லாரியின் பின் பகுதியில் இருந்த பொருட்களிலும் தீப்பிடித்தது.

விமான நிலையத்தின் அவசரச் சேவைப் பிரிவு தீயை அணைத்தது. அதனைத் தொடர்ந்து கீழ்த்தளம் மீண்டும் திறக்கப்பட்டது.

சுமார் 4 மணியளவில் சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை கூறியது. 

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தப் பகுதியில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 

தீச்சம்பவம் நடந்த பகுதியில் பேருந்து நிறுத்தம் ஒன்றும் இருந்ததாக அதிகாரிகள் கூறினர்.

பயணிகள் அந்த நிறுத்தத்துக்குப் பதிலாக வேறு இடத்தில் இறங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்