Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர்க் கடற்பகுதியில் கப்பல் விபத்து: 5 பேரைக் காணவில்லை, 7 பேர் காயம்

சிங்கப்பூர்க் கடற்பகுதியில் கப்பல் ஒன்றும், மணல் தோண்டி மிதவைக் கப்பல் ஒன்றும் மோதிக்கொண்டதில் 5 பேரைக் காணவில்லை.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர்க் கடற்பகுதியில் கப்பல் விபத்து: 5 பேரைக் காணவில்லை, 7 பேர் காயம்

(படம்: Reuters/Vivek Prakash)

சிங்கப்பூர்க் கடற்பகுதியில் கப்பல் ஒன்றும், மணல் தோண்டி மிதவைக் கப்பல் ஒன்றும் மோதிக்கொண்டதில் 5 பேரைக் காணவில்லை.

தேடல், மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சம்பவம் நேர்ந்தபோது அந்த மணல் தோண்டி மிதவைக் கப்பலில் 12 ஊழியர்கள் இருந்தனர்.

அவர்களில் 7 பேர் மீட்கப்பட்டனர்.

காயமுற்ற அந்த 7 பேரும் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.அவர்களில் 5 பேர் சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து வெளியேறிவிட்டனர்.

நள்ளிரவு சுமார் பன்னிரண்டே முக்கால் மணிக்குச் சம்பவம் ஏற்பட்டதாக, சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் தெரிவித்தது.

சிஸ்டர்ஸ் தீவுக்கு அருகில் சம்பவம் ஏற்பட்டது.
இந்தோனேசியாவில் பதிவு செய்யப்பட்ட கார்டிகா சேகாரா (Kartika Segara) கப்பலும், டோமினிக்கன் குடியரசில் பதிவு செய்யப்பட்ட மணல் தோண்டி மிதவைக் கப்பலும் மோதின.

அதில் மணல் தோண்டி மிதவைக் கப்பல் கவிழ்ந்ததாகவும், அது தற்போது கிட்டத்தட்ட பாதி அளவு மூழ்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மணல் தோண்டி மிதவைக் கப்பலில் இருந்த 12 ஊழியர்களில் ஒருவர் மலேசியர். மற்றவர்கள் சீனாவைச் சேர்ந்தவர்கள்

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்