Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஒலிம்பிக்கில் சிங்கப்பூருக்கு முதல் தங்கப்பதக்கம்

2016ஆம் ஆண்டு இன்றைய தினம்... பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஒலிம்பிக் போட்டிகள்... 100 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சல்.....

வாசிப்புநேரம் -

13 ஆகஸ்ட் 2016

 

2016ஆம் ஆண்டு இன்றைய தினம்...

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஒலிம்பிக் போட்டிகள்...

100 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சல்.....

போட்டியின் இறுதிச் சுற்றில் களம் இறங்கினார், சிங்கப்பூரின் 21 வயது ஜோசஃப் ஸ்கூலிங்.

பலரும் தொலைக்காட்சி முன் கண்சிமிட்டாமல் அமர்ந்திருந்தனர்.

பரவசம் மேலோங்க பரபரப்புடன் பலரும் காத்திருந்த தருணம்....

கனவு மெய்யானது!

ஒலிம்பிக்கில் சிங்கப்பூருக்கான முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றுக்கொடுத்தார் ஸ்கூலிங்!

அவர் எடுத்துக்கொண்ட நேரம் 50.39 விநாடிகள்.

பிரபல அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கல் ஃபெல்ப்ஸ், தென்னாப்பிரிக்க வீரர் சாட் லே கிளோஸ் ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளி ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கத்தை வென்ற முதல் தென்கிழக்காசிய நீச்சல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார், ஸ்கூலிங். 

சிங்கப்பூருக்கு அது வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாக அமைந்தது.
  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்