Images
  • Orchardd

ஆர்க்கிட் வளர்ப்புத் துறை - 20 ஹெக்டருக்கும் அதிகமான நிலம் ஒதுக்கீடு

தேசிய பூங்காக் கழகம் முதல் முறையாக ஆர்க்கிட் வளர்ப்புத் துறைக்கு இருபது ஹெக்டருக்கும் அதிகமாக நிலம் ஒதுக்கியிருக்கிறது. அதன் முதற்பகுதி வரும் ஜூன் மாதம் குத்தகைக்கு விடப்படும்.

பண்ணைக்காக ஒதுக்கப்படும் நிலங்களில், சில அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். அதன் மூலம் ஆர்க்கிட் வளர்ப்பில் ஈடுபடுவோர் அங்கு விரைவாகத் தொழில் செய்ய முடியும்.

லிம் சூ காங், சுங்கை தெங்கா வட்டாரங்களில் ஆர்க்கிட் வளர்ப்புக்கு நிலம் ஒதுக்கப்படும்.

பண்ணையின் ஒரு ஹெக்டர் நிலம் மூன்றாண்டுக்கு ஒருமுறையும், மேலும் இரண்டு ஹெக்டர் நிலம் பத்தாண்டுக்கு ஒருமுறையும் புதுப்பிக்கப்படும். ஆர்க்கிட் வளர்ப்பின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்ய அது உதவும்.
ஆர்க்கிட் வளர்ப்புத் துறையை உருமாற்றத் தொழில்துறையினருடன் அணுக்கமாகச் செயல்படுவதாகவும் கழகம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்து

Top