Images
  • Uber (1)
    கோப்புப் படம்: REUTERS/Toby Melville/Illustration

புதிய கார் பகிர்வு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள ஊபர்

புதிய கார் பகிர்வு திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளதாக ஊபர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

'ஊபர் கம்யூட்' என்ற அந்தச் சேவை நாளை நடப்புக்கு வரும். அதன் கீழ், ஒரே வழியில் செல்லும் இருவர் சேர்ந்து பயணம் செய்யலாம்.  ஓட்டுநருடன் பயணியை இணைத்து விடும் ஊபர் செயலி, இச்சேவைக்காகப் பயணிகளுக்கு குறைந்த கட்டணமே விதிக்குப்படும்.

'ஊபர் கம்யூட்' சேவைக் கட்டணம் அதன் தனியார் சேவைகளின் கட்டணத்தை விட 51 விழுக்காடு குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வார நாட்களில் அதிகாலை 5 மணியிலிருந்து இரவு 10 மணி வரை ஊபர் செயலியின் மூலம் புதிய 'ஊபர் கம்யூட்' சேவையைப் பயணிகள் பயன்படுத்தலாம்.

கார் பகிர்வு சேவைகளை கிராப் நிறுவனமும் Ryde நிறுவனமும் வழங்கி வருகின்றன.

கிராப் நிறுவனத்தின் GrabHitch சேவை கடந்த 2015ல் தொடங்கப்பட்டது.

இந்நிலையில், புதிதாக ஊபரும் கார் பகிர்வுச் சேவையில் தடம் பதிக்கிறது.

உங்கள் கருத்து

Top