Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பாசிர் ரிஸ்: கைவிடப்பட்ட எலிகள் குறித்த விவரங்களுக்கு $1000 பரிசுத் தொகை

பாசிர் ரிஸ் டிரைவ் 4ல் 54 எலிகள் கைவிடப்பட்ட சம்பவத்தின் தொடர்பில் விசாரணை நடைபெற்று வருவதாக வேளாண்மை, உணவு கால்நடை மருத்துவ ஆணையம் தெரிவித்திருக்கிறது.

வாசிப்புநேரம் -
பாசிர் ரிஸ்: கைவிடப்பட்ட எலிகள் குறித்த விவரங்களுக்கு $1000 பரிசுத் தொகை

(படம்: Lee Li Ying)

சிங்கப்பூர்: பாசிர் ரிஸ் டிரைவ் 4ல் 54 எலிகள் கைவிடப்பட்ட சம்பவத்தின் தொடர்பில் விசாரணை நடைபெற்று வருவதாக வேளாண்மை, உணவு கால்நடை மருத்துவ ஆணையம் தெரிவித்திருக்கிறது.

நேற்று முன்தினம் இரவில் அந்த எலிகள் அங்கு காணப்பட்டன. எலிகளைக் கண்டவர்கள் உடனே அவற்றை அட்டைப் பெட்டி ஒன்றில் சேகரித்தனர். பின்னர் அவை மிருக வதைத் தடுப்புச் சங்கத்திடம்  ஒப்படைக்கப்பட்டன.

கைவிடப்பட்ட எலிகள் செல்லப்பிராணிகள் என்று சங்கம் கருதுகிறது.

(படம்: Karen Teng)

அது குறித்து விவரம் அளிப்போருக்கு $1000 பரிசுத் தொகை வழங்கப்படும் எனச் சங்கம் அறிவித்துள்ளது. 

(படம்: Lee Li Ying)

செல்லப்பிராணிகளைக் கைவிடும் முதல் குற்றத்திற்கு ஓராண்டு வரையிலான சிறைத்தண்டனையும் 10,000 வெள்ளி வரையிலான அபராதமும் விதிக்கப்படலாம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்