Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மொத்த ஊழியரணி உற்பத்தித் திறன் அதிகரித்தது

சிங்கப்பூரின் மொத்த ஊழியரணி உற்பத்தித் திறன், இவ்வாண்டின் முதற்பாதியில் 2.8 விழுக்காடு கூடியுள்ளது. மனிதவள அமைச்சு அந்தத் தகவலை வெளியிட்டது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரின் மொத்த ஊழியரணி உற்பத்தித் திறன், இவ்வாண்டின் முதற்பாதியில் 2.8 விழுக்காடு கூடியுள்ளது. மனிதவள அமைச்சு அந்தத் தகவலை வெளியிட்டது.

கடந்த ஆண்டின் அதே காலக்கட்டத்தில் ஏற்பட்ட 0. 6 விழுக்காட்டு வளர்ச்சியைக் காட்டிலும் அண்மை விகிதம் மேம்பட்டுள்ளது. 2016இன் இரண்டாம் காலாண்டில் ஏற்பட்ட 1.3 விழுக்காட்டு வளர்ச்சியைவிடவும் அண்மை விகிதம் அதிகமாக உள்ளது.

உற்பத்தி, போக்குவரத்து, மொத்த, சில்லறை வர்த்தகம், விநியோகம் முதலிய துறைகள் வளர்ச்சிக்குப் பெரும் பங்களித்துள்ளதாக மனிதவள அமைச்சு தெரிவித்தது.

ஆனால் தங்குமிடம், உணவுச் சேவைகள், கட்டுமானம், நிதி, காப்புறுதி, தகவல் தொடர்பு ஆகிய துறைகளில் உற்பத்தி குறைந்திருப்பதாக அமைச்சு சொன்னது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்