Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

"போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டது ஏமாற்றமளிக்கிறது": டாக்டர் டான் செங் போக்

சிங்கப்பூர் வரலாற்றில் ஆகச் சர்ச்சைக்குரிய முறையில் திருவாட்டி ஹலிமா யாக்கோப் அதிபர் பதவியை ஏற்கவிருப்பதாக, முன்னைய அதிபர் வேட்பாளர் டான் செங் போக் கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -
"போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டது ஏமாற்றமளிக்கிறது": டாக்டர் டான் செங் போக்

கோப்புப் படம்: AFP

சிங்கப்பூர் வரலாற்றில் ஆகச் சர்ச்சைக்குரிய முறையில் திருவாட்டி ஹலிமா யாக்கோப் அதிபர் பதவியை ஏற்கவிருப்பதாக, முன்னைய அதிபர் வேட்பாளர் டான் செங் போக் கூறியுள்ளார்.

திருவாட்டி ஹலிமா நேற்று அதிபர் தேர்தலுக்கான வேட்புமனுவைத்  தாக்கல் செய்தார். மற்ற இரண்டு உத்தேச வேட்பாளர்கள் தகுதிநிலைகளை எட்டாததால் போட்டியின்றி அவர் அந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

திருவாட்டி ஹலிமாவுக்குத் தமது வாழ்த்துகளைத் தெரிவித்தபோதும், போட்டியில்லாமல் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டது ஏமாற்றமளிக்கிறது என்று டாக்டர் டான் கூறினார்.
1993ஆம் ஆண்டு அதிபர் தேர்தலின்போது வேட்பாளராக இருந்த திரு ஓங் தேங் சியோங் அரசாங்கத்தால் ஆதரிக்கப்பட்டவர் என்றாலும் அவருக்கு எதிராக திரு சுவா கிம் யாவ்வைப் போட்டியிட, முன்னையத் துணைப்பிரதமர் கோ கெங் சுவி ஊக்குவித்ததாக டாக்டர் டான் சுட்டினார்.

மக்களுக்குத் தெரிவு செய்வதற்கான வாய்ப்பை வழங்குவது திரு கோவின் எண்ணமாக இருந்ததாய் டாக்டர் டான் கூறினார். போட்டியின்றி அதிபர் வேட்பாளர் வென்றுவிடக்கூடாது என்பதற்காக 2011 தேர்தலில் தாம் போட்டியிட்டதாக டாக்டர் டான்  கூறினார்.

திருவாட்டி ஹலிமா தேர்தலில் வென்றுவிடுவார் என்பது அனைவரும் அறிந்ததே என்று டாக்டர் டான் கூறினார். ஆயினும், அரசாங்கத்திடம் தங்களது எண்ணங்களைத் தெரிவிப்பதற்காக வாக்கெடுப்பை அனைவரும் எதிர்பார்த்திருந்ததாக டாக்டர் டான் கூறினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்