Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அனுமதியின்றி வனவிலங்குகளை வைத்திருந்த ஆடவருக்கு அபராதம்

இரண்டு 'இந்தியன் ஸ்டார்' (Indian star) ஆமைகளையும் முள்ளம்பன்றி ஒன்றையும் அனுமதியின்றி வைத்திருந்த குற்றத்திற்காக ஆடவர் ஒருவருக்கு 6,600 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: இரண்டு 'இந்தியன் ஸ்டார்' (Indian star) ஆமைகளையும் முள்ளம்பன்றி ஒன்றையும் அனுமதியின்றி வைத்திருந்த குற்றத்திற்காக ஆடவர் ஒருவருக்கு 6,600 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வேளாண், உணவு கால்நடை மருத்துவ ஆணையம் அந்தத் தகவலை வெளியிட்டது. 33 வயது லிம் கொக் ஹுவாட் அந்த விலங்குகளை விற்கத் திட்டமிட்டுள்ளார் என்பதை கடந்த
பிப்ரவரி 28-ம் தேதியன்று, ஆணையம் அறிந்தது.

அதைத் தொடர்ந்து ஆமைகளும் முள்ளம்பன்றியும் பறிமுதல் செய்யப்பட்டன. Wildlife Reserves Singapore அமைப்பு தற்போது அவற்றைப் பராமரிக்கிறது.

சிங்கப்பூரில் வனவிலங்குகளை வைத்திருப்பதும் அவற்றை விற்பதும் சட்டபடி குற்றம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்