Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரின் சில பகுதிகளில் தரைக் கற்களிலும் சுவர்க் கற்களிலும் வெடிப்பு

சிங்கப்பூரின் வெவ்வேறு பகுதிகளில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளின் குடியிருப்பாளர்கள், வீடுகளின் தரையில் பதிக்கப்பட்ட கற்கள்  திடீரென வளைந்து உடைந்ததாய்க் கூறியுள்ளனர்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரின் வெவ்வேறு பகுதிகளில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளின் குடியிருப்பாளர்கள், வீடுகளின் தரையில் பதிக்கப்பட்ட கற்கள் திடீரென வளைந்து உடைந்ததாய்க் கூறியுள்ளனர்.

பொங்கோல், செங்காங், புக்கிட் பாஞ்சாங், உட்லண்ட்ஸ், ஹோகாங், ஜூரோங் வெஸ்ட் ஆகிய பகுதிகளில் அத்தகைய சம்பவங்கள் இடம்பெற்றதாய்த் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(ஜூரோங் வட்டாரத்தில் பெயர்ந்திருக்கும் சுவர்க்கற்கள்)

கற்கள் பதிக்கப்பட்டபோது சரியாகப் பொருத்தப்படாமலிருந்திருக்கலாம்; அத்துடன், அண்மை நாட்களாக நிலவிவரும் தட்பநிலையும் அத்தகைய "வெடிப்பு" களுக்குக் காரணமாயிருக்கலாம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.  

(ஹோகாங் ஸ்டிரீட் 91-இன் மின்தூக்கி முகப்பில் பெயர்ந்திருக்கும் கற்கள்)

அதன் தொடர்பில் வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தமது ஃபேஸ்புக் (Facebook) பக்கத்தில் தெரிவித்துள்ளது. வீடுகளில் அத்தகைய வெடிப்புகள் ஏற்பட்டால் அந்தப் பகுதியை அட்டைகளைக் கொண்டு மூடி வைக்கும்படி கழகம் கேட்டுக்கொண்டது.

மேலும் கழகத்தைத் தொடர்புகொண்டு தகவல் அளிக்குமாறும் கூறப்பட்டது.  கழகத்தின் ஊழியர்கள் அதை நேரில் சென்று பார்வையிடுவர் என்று தெரிவிக்கப்பட்டது. 





விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்