Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

திரு லீ குவான் இயூவின் இறுதி உயிலைக் கையாண்டதில் முறைகேடு - வழக்குரைஞர் லீ சுவெட் ஃபெர்ன் சட்டத்துறையில் பணியாற்ற 15 மாதத் தடை

சிங்கப்பூரின் முதல் பிரதமர் திரு லீ குவான் இயூவின் இறுதி உயிலைக் கையாண்டதில் முறைகேடு இருந்ததன் தொடர்பில் வழக்குரைஞர் லீ சுவெட் ஃபெர்ன் (Lee Suet Fern) சட்டத்துறையில் பணியாற்ற 15 மாதத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
திரு லீ குவான் இயூவின் இறுதி உயிலைக் கையாண்டதில் முறைகேடு - வழக்குரைஞர் லீ சுவெட் ஃபெர்ன் சட்டத்துறையில் பணியாற்ற 15 மாதத் தடை

(படம்: Morgan, Lewis & Bockius LLP)

சிங்கப்பூரின் முதல் பிரதமர் திரு லீ குவான் இயூவின் இறுதி உயிலைக் கையாண்டதில் முறைகேடு இருந்ததன் தொடர்பில் வழக்குரைஞர் லீ சுவெட் ஃபெர்ன் (Lee Suet Fern) சட்டத்துறையில் பணியாற்ற 15 மாதத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

திரு. லீ குவான் இயூவின் மருமகளுமான திருமதி லீ, வழக்குரைஞருக்கு ஏற்ற வகையில் நடந்துகொள்ளவில்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் (Sundaresh Menon), மேல்முறையீட்டு நீதிபதி ஜுடித் பிரகாஷ் (Judith Prakash), நீதிபதி வூ பி லி(Woo Bih Li) ஆகியோர் கொண்ட குழு அவ்வாறு தீர்ப்பளித்தது.

வழக்கின் மையமாக இருப்பது காலஞ்சென்ற திரு. லீயின் ஆக்ஸ்லி ரோடு வீடு.

திரு. லீயின் முன்னைய 6 உயில்களை வழக்கறிஞர் திருவாட்டி குவா கிம் லி (Kwa Kim Li) தயாரித்தார்.

இறுதி உயில் 2013 டிசம்பரில் தயார் செய்யப்பட்டது. திருவாட்டி குவா இல்லாத சமயத்தில், திருமதி. லீ சுவெட் ஃபெர்ன் அதை கையாண்டதாக நம்பப்படுகிறது.

இருப்பினும், முன்னைய உயில்களிலிருந்து அந்த உயில் கணிசமாக மாறுபட்டிருந்தது.

இறுதி உயிலில் சொத்துகள் திரு. லீயின் பிள்ளைகளுக்குச் சமமாகப் பிரித்துக்கொடுப்பது குறிப்பிடப்பட்டது.

திரு. லீயின் ஆக்ஸ்லி ரோடு வீடு இடிக்கப்பட வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அது குறித்த திருமதி. லீ சுவெட் ஃபெர்னின் விளக்கத்தில் முரண்பாடுகள் இருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

முதலில் திரு. லீ, தம்முடைய உயிலில் மாற்றம் செய்யுமாறு அவரிடம் நேரடியாகக் கேட்டுக்கொண்டதாகக் கூறப்பட்டது.

பிறகு, திரு. லீ, தம் மகன் திரு. லீ சியென் யாங்கிடம் (Lee Hsien Yang) உயிலில் மாற்றம் செய்யச் சொன்னதாகவும் அவர் அது பற்றித் தம் மனைவி திருமதி. லீ சுவெட் ஃபெர்னிடம் சொன்னதாகவும் கூறப்பட்டது.

இருப்பினும் நீதிமன்றத்தின் முடிவை ஏற்கவில்லை என்று திருமதி. லீ தெரிவித்துள்ளார்.

யார் வேண்டுமானாலும் தங்களுடைய உயிலை மீட்டுக்கொள்ளலாம். திரு. லீக்கு தம் உயில் பிடிக்கவில்லை என்றால் எப்போது வேண்டுமென்றாலும் அவர் புதிய உயிலைத் தயார்செய்திருக்கலாம் என்று திருமதி. லீ சொன்னார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்