Images

காலத்தால் அழியாத பாடல்களைப் போற்றிய 'தமிழும் இசையும்' நிகழ்ச்சி (காணொளி)

சிங்கப்பூரில் தமிழர்கள் சிறுபான்மையினராக இருந்தாலும், தமிழ் இங்கு வாழும் மொழியாக நிலைத்திருக்க அனைவரும் இணைந்து முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் மரபுடைமைச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த "தமிழும் இசையும்" நிகழ்ச்சியில் பேசிய போது அவர் அவ்வாறு கூறினார்.

நிகழ்ச்சியின் கருப்பொருள் கவியரசு கண்ணதாசனின் பாடல்கள்.

இசைக்கவி ரமணன், பாடகர் வீரமணி ராஜு இருவரும் நிகழ்ச்சியை வழிநடத்தினர்.

கண்ணதாசனின் பாடல்களைப் பாடி, அவற்றில் நிறைந்துள்ள நல்ல கருத்துகளை சுவையான முறையில் எடுத்துரைத்தனர்.


உங்கள் கருத்து

Top