Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இணைப்பாட வகுப்புகளின் அடிப்படையில் செயல்படும் பள்ளி - முன்னேற்றம் கண்ட மாணவர்கள்

பள்ளிக்கூடத்தின் செயல்முறைகளை முழுமையாக மாற்றியமைப்பதில் எதிர்பாரா விளைவுகள் ஏற்படக்கூடும். 

வாசிப்புநேரம் -
இணைப்பாட வகுப்புகளின் அடிப்படையில் செயல்படும் பள்ளி - முன்னேற்றம் கண்ட மாணவர்கள்

(படம்: Channel NewsAsia)

பள்ளிக்கூடத்தின் செயல்முறைகளை முழுமையாக மாற்றியமைப்பதில் எதிர்பாரா விளைவுகள் ஏற்படக்கூடும்.

ஆனால், வழக்கமான வகுப்புகளைத் தவிர்த்துவிட்டு இணைப்பாட நடவடிக்கைகளின் அடிப்படையில் மாணவர்களை வகைப்படுத்துகிறது ஓர் உயர்நிலைப் பள்ளி.

அது மாணவர்களுக்குப் நல்ல பயனளித்துள்ளது.

2016இல் அறிமுகம் செய்யப்பட்ட திட்டத்தால் பூன் லே உயர்நிலைப் பள்ளியுடன் இணைக்கப்பட்டது பயனியர் உயர்நிலைப் பள்ளி.

நூற்றுக்கணக்கான மாணவர்களைச் சமாளிக்க பூன் லே பள்ளி தொடக்கத்தில் சற்றுத் திக்குமுக்காடியது.

பாடங்களைச் சரிவரச் செய்யாத மாணவர்கள் இணைப்பாட நவடிக்கைகளில் தேறியுள்ளதை அது கண்டறிந்தது.

சென்ற ஆண்டு பள்ளிக்கூடத்தில் புதிய செயல்முறை நடப்புக்கு வந்தது. அதன் மூலம் நல்ல மாற்றம் விளைந்தது.

மாணவர்களின் அன்றாட வருகை 95 இலிருந்து நூறு விழுக்காடானது.

நேரத்தோடு பள்ளிக்கு வரும் மாணவர்கள், சாதாரணநிலை, வழக்கநிலை தேர்வுகளில் சிறப்பாகத் தேர்ச்சியடைந்தனர்.

மாணவர்களிடையே புகைப்பிடித்தல், திருட்டு, சண்டை போன்ற செயல்கள் கணிசமாகக் குறைந்தன.

இருப்பினும், கலாசார இணைப்பாடங்களில் சேரும் மாணவர்கள் இன ரீதியில் தனித்தனிக் குழுவாகப் பிரிந்து செயல்பட வாய்ப்பு உள்ளது என்பதையும் பள்ளி கருத்தில் கொண்டுள்ளது.

வகுப்புகளை வகைப்படுத்தும் சுதந்திரம் எல்லாப் பள்ளிகளுக்கும் உண்டு என்று குறிப்பிட்ட கல்வியமைச்சு, புதிய மாற்றங்களை வரவேற்றுள்ளது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்