Images
  • ceh
    (படம்:  Channel NewsAsia)

சிட்டி ஹார்வஸ்ட் தேவாலயத்தின் சியூ எங் ஹான் தப்பிக்க உதவியதாகச் சந்தேகிக்கப்படும் மலேசியர் கைது

சிங்கப்பூர்: சிட்டி ஹார்வஸ்ட் தேவாலய முன்னாள் தலைவர் சியூ எங் ஹான் தப்பிச் செல்ல முயன்றதில் உடந்தையாக இருந்த சந்தேகத்தின்பேரில் 42-வயது மலேசியர், டான் கிம் ஹோ, கைது செய்யப்பட்டுள்ளார்.

சுமார் மூவாண்டு சிறைத் தண்டனை தொடங்குவதற்கு முதல்நாள் படகு மூலம் சிங்கப்பூரிலிருந்து தப்பிக்க முயன்ற போது கைது செய்யப்பட்டார் சியூ. அவருடைய படகோட்டி 53-வயது டான் போ டெக்கும் கைது செய்யப்பட்டார்.

மலேசியாவுக்குச் செல்லும் வழியில் அவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.

மற்றொரு மலேசியர் கூ கியா லெங் அணுகியதால் தப்பிக்கும் முயற்சியில் உதவ டான் முன்வந்ததாக நம்பப்படுகிறது. இவ்வாரம் (ஏப்ரல் 12) கூவுக்கும் ஆறு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

மலேசியாவில் நேற்று (ஏப்ரல் 14) கைதான டான் சிங்கப்பூர் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். நாளை (எப்ரல் 16) அவர் மீது குற்றஞ்சாட்டப்படும்.

டானை கைது செய்ய ஒத்துழைத்த மலேசிய காவல்துறைக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார் கரையோரக் காவல் துறையில் தளபது சூ சின் யுன். 

Top