Images
  • barisan
    (படம்: Facebook/Mohamed Khaled Nordin)

'ஜொகூரில் 3 புதிய, பெரிய கேளிக்கைப் பூங்காக்கள்'-தேசிய முன்னனி கூட்டணியோ தேர்தல் அறிக்கை

7.6 பில்லியன் ரிங்கிட் செலவில் ஜொகூரில் 3 பெரிய கேளிக்கைப் பூங்காக்களை உருவாக்கப்போவதாக தேசிய முன்னனி கூட்டணித் தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மலேசியாவின் 14ஆவது பொதுத்தேர்தல் அடுத்த மாதம் 9-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. அதனையொட்டி, ஜொகூர் மாநில முதலமைச்சர் முகமது கலித் நோர்டின் கூட்டணியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

வட்டாரத்தின் பெரும் பொருளியல் சக்தியாகத் திகழப்போகிறோம்; சிங்கப்பூர் உட்பட இந்த வட்டாரத்தின் அனைத்து நாடுகளுக்கும் ஜொகூர் போட்டி கொடுக்கும். 


"ஜொகூர் ஹை ஃபை (Johor Hi-5)" என்று பெயரிடப்பட்டிருக்கும் கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

-4.5 பில்லியன் ரிங்கிட் செலவில் தெசாரு (Desaru) கரையோர ஒருங்கிணைந்த பயணிகள் நிலையம்

--ஒருங்கிணைந்த பயணிகள் நிலையத்தில் உலகத் தரம் வாய்ந்த 400 மில்லியன் ரிங்கிட் செலவிலான அறிவியல் கேளிக்கைப் பூங்கா (Sci-Fi Universe Theme Park)

--2.7 பில்லியன் ரிங்கிட்  செலவில் ஜொகூர் சுற்றுச்சூழல் கேளிக்கைப் பூங்கா

--சிங்கப்பூருக்கு இணையாக சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது

--இவற்றின் மூலம் சுமார் 250,000 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுப்பது

--ஜொகூரில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 50 ரிங்கிட் சேமிப்புத்தொகை

--தொடக்கநிலை ஒன்று மாணவர்களுக்கு 100 ரிங்கிட் செலவுப் பணம்

--3000 ரிங்கிட்டுக்குக் குறைவாகச் சம்பளம் ஈட்டும், முதல்முறை திருமணம் செய்யும் இளையர்களுக்கு, 500ரிங்கிட் அன்பளிப்பு.
 

உங்கள் கருத்து

Top