Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிறு பிள்ளைகளை பள்ளிக்கு ஆயத்தப்படுத்தும் முயற்சிகளை மேம்படுத்தும் மெண்டாக்கி

சிங்கப்பூரில், மலாய் சுய உதவிக் குழுவான மெண்டாக்கி , சிறு பிள்ளைகளை பள்ளிக்கு ஆயத்தப்படுத்தும் முயற்சிகளை மேம்படுத்தும் வகையில், சிங்கப்பூர் மலாய் - முஸ்லிம் சமூகத்தை ஊக்குவிக்க முனைகிறது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில், மலாய் சுய உதவிக் குழுவான மெண்டாக்கி , சிறு பிள்ளைகளை பள்ளிக்கு ஆயத்தப்படுத்தும் முயற்சிகளை மேம்படுத்தும் வகையில், சிங்கப்பூர் மலாய் - முஸ்லிம் சமூகத்தை ஊக்குவிக்க முனைகிறது. குறிப்பாக, மின்னிலக்க திறன்களில் அது கவனம் செலுத்த விருப்பம் தெரிவித்துள்ளது.

மெண்டாக்கியின் ஏற்பாட்டில் நடந்த கல்விக் கருத்தரங்கு ஒன்றில், அந்தக் கருத்து முன் வைக்கப்பட்டது. பாலர் பள்ளி கற்றலை தொழில்நுட்பம் எவ்வாறு பாதிக்கிறது என்பதன் தொடர்பில், 14 பேச்சாளர்கள் அந்தக் கருத்தரங்கில் பேசினர்.

'மின்னிலக்க உலகில் புத்தாக்க சிந்தனையுடைய இளம் பிள்ளைகளை வளர்த்தல்' என்ற தலைப்பிலான அந்தக் கருத்தரங்கில், தொழில்நுட்பத்தின் பல்வேறு அம்சங்கள், எவ்வாறு ஆரம்பகால குழந்தைப் பராமரிப்புத் துறையில், கற்றல்-கற்பித்தல் முறைகளுக்குப் பயன்படுத்தப்படலாம் என்று ஆராயப்பட்டது.

அந்தக் கருத்தரங்கில் விவாதிக்கப்பட்ட மற்றோர் அம்சம், பிள்ளைகளின் வளர்ச்சியில், விளையாட்டு ஆற்றும் முக்கியப் பங்கு குறித்ததாகும்.

அதன் தொடர்பில், மெண்டாக்கியின் ஏற்பாடு செய்துள்ள 'Play Fest' எனும் விளையாட்டு விழா முதன்முறையாக இன்று டௌண்டவுன் ஈஸ்டில் நடைபெறுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்