Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இன்றும் பொருத்தமாக இருக்கும் கருத்துள்ள தமிழ் பாடல்கள்

சமூகத்திற்கு அறிவுரைகளைப் இனிய இசைத் தமிழில், பாடல்கள் மூலம் கூறினார் பாடலாசிரியர் பட்டுகோட்டை கல்யாணசுந்தரம். 

வாசிப்புநேரம் -

சமூகத்திற்கு அறிவுரைகளைப் இனிய இசைத் தமிழில், பாடல்கள் மூலம் கூறினார் பாடலாசிரியர் பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்.

பல ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட அந்தப் பாடல்களின் வரிகள் இன்றைய காலக்கட்டத்திற்குப் பொருத்தமுள்ளதாக இருக்கிறன என்பதை நிரூபித்தது இன்று நடைபெற்ற ஒரு போட்டி.

மக்கள் கவிஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையத்தில் நடந்த ‘பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாட்டுப் போட்டி’ நிகழ்ச்சியில் 120 பேர் பங்கேற்று அப்பாடல்களுக்கு உயிரூட்டினர்.

‘சின்னப் பயலே’, ‘செய்யும் தொழிலே தெய்வம்’ போன்ற பிரபல பாடல்களை இயற்றிய பட்டுகோட்டை கல்யாணசுந்தரத்தின் கருத்துள்ள வரிகளை சிறியோர் முதல் பெரியோர் வரை போட்டியில் பாடி மகிழ்ந்தனர்.

ஐந்து பிரிவுகளில் போட்டியிட்ட பங்கேற்பாளர்களில் 25 பேர் இரண்டாம் சுற்றுக்குத் தகுதி பெற்றனர்.

அவர்கள் பாடிய பாடல்களைப் பதிவு செய்து வந்தது தமிழ்ச் செய்தி. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்