Images
  • play
    (படம்: TODAY)

சிறப்புக் கருப்பொருள்களைக் கொண்ட விளையாட்டு மைதானங்கள் குடியிருப்புப் பேட்டைகளில் அறிமுகம்

பொது வீடமைப்புப் பேட்டைகளில் அமைந்துள்ள விளையாட்டு மைதானங்கள் விரைவில் உருமாற்றம் காணவுள்ளன.

அவை கருப்பொருள் அடிப்படையிலான விளையாட்டு மைதானங்களாக மாற்றியமைக்கப்படவுள்ளன.

குழந்தைகள் அதிகமாக விரும்பிச் செல்லும் இடங்கள் விளையாட்டு மைதானங்கள்.

கடந்த பத்தாண்டுகளில் விளையாட்டு மைதானங்களின் வடிவமைப்பு பல மாற்றங்களைக் கண்டுள்ளது.

விளையாட்டு மைதானங்களில் இன்னும் கூடுதலான மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.

குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் சமூக உணர்வை வழங்கும் இடமாக விளையாட்டு மைதானங்களை மாற்றியமைப்பது இலக்கு.

விளையாட்டு மைதானங்கள் அமைந்திருக்கும் வட்டாரத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க அம்சங்களைக் கருப்பொருளாகக் கொண்டு அவை உருமாற்றம் செய்யப்படும்.

2016ஆம் ஆண்டிலிருந்து இதுவரை, 6 விளையாட்டு மைதானங்களின் புதுப்பிப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

தோ பாயோ, செங்காங், உட்லண்ட்ஸ் ஆகிய குடியிருப்புப் பேட்டைகளில் உள்ள விளையாட்டு மைதானங்கள் அவற்றுள் அடங்கும்.

டோசன், புக்கிட் பாஞ்சாங், கிளமெண்டி ஆகிய வட்டாரங்களில் மேலும் 9 விளையாட்டு மைதானங்கள் 2021ஆம் ஆண்டுக்குள் தயாராகிவிடும்.

டோசன் வட்டாரத்தில் மட்டும் 5 புதிய விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படவுள்ளன.
 

Top