Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பெட்ரோல் கொள்கலனை முழுமையாக நிரப்ப $10 கட்டிய வாகனமோட்டி, மிச்சப் பணத்தைக் கட்டியது யார்?

கால்டெக்ஸ் சிங்கப்பூர் பெரட்ரோல் நிலையத்தில் நடத்த சம்பவத்தின் காணொளி ஒன்று இணையத்தில் பரவிவருகிறது.

வாசிப்புநேரம் -
பெட்ரோல் கொள்கலனை முழுமையாக நிரப்ப $10 கட்டிய வாகனமோட்டி, மிச்சப் பணத்தைக் கட்டியது யார்?

(படம்: Google Street View)

சிங்கப்பூர்: கால்டெக்ஸ் சிங்கப்பூர் பெட்ரோல் நிலையத்தில் நடந்த சம்பவத்தின் காணொளி ஒன்று இணையத்தில் பரவிவருகிறது.

தம்பனீஸ் அவென்யு 8இல் உள்ள பெட்ரோல் நிலையத்தில் வாடிக்கையாளர் ஒருவர் $135 பெறுமானமுள்ள பெட்ரோலுக்கு கட்டணம் செலுத்த மறுத்தது பதிவில் குறிப்பிடப்பட்டது.

$10க்கு மட்டுமே பெட்ரோல் செலுத்த கேட்டதாகக் காசாளரிடம் அவர் விவாதிக்கிறார். விவாதம் சூடேற பெட்ரோல் போட உதவிய ஊழியர் அழைக்கப்படுகிறார்.

பெட்ரோல் கொள்கலனை முழுமையாக நிரப்புமாறு ஓட்டுநர் கேட்டதாக வயதான ஊழியர் கூறும் போது உடனடியாக அதை மறுக்கிறார் ஓட்டுநர்.

இறுதியில் $10 மட்டும் கட்டிவிட்டு சென்றார் BMW Series 5 வாகன ஓட்டுநர். மீதம் $125ஐ தாம் கட்டுவதாக முதியவர் குறிப்பிட்டார் என்று படங்களைப் பதிவேற்றம் செய்த கெல்லி யோ கூறினார்.

3,000க்கும் அதிகமான முறை சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட காணொளியை பார்த்தவர்களில் சிலர், முதியவருக்குப் பதிலாக பணம் செலுத்த முன்வந்துள்ளனர். நிறுவனம் முதிய ஊழியர்களிடம் கருணை காட்ட கோரியுள்ளனர்.

சம்பவத்தை விசாரித்து வரும் கால்டெக்ஸ் சிங்கப்பூரின் விளம்பரதாரரான செவ்ரோன், முதிய ஊழியர் அந்த $125 கட்டும் நிலைமைக்கு ஆளாக்கப்படவில்லை என்று விளக்கமளித்துள்ளது.

தங்கள் ஊழியர்களின் நலனில் அக்கறை செலுத்திய சமூகத்தினருக்கு நிறுவனம் நன்றி தெரிவித்துக் கொண்டது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்