Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

Whatsapp படத்தில் இருந்த கைரேகையினால் பிரிட்டனில் கைதான குற்றவாளி

Whatsapp படத்தில் இருந்த கைரேகையைக் கொண்டு பிரிட்டிஷ் காவல்துறையினர் குற்றவாளியைப் பிடித்துள்ளனர்.

வாசிப்புநேரம் -

Whatsapp படத்தில் இருந்த கைரேகையைக் கொண்டு பிரிட்டிஷ் காவல்துறையினர் குற்றவாளியைப் பிடித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இன்னொரு குற்றவாளியின் கைப்பேசியில் அந்த Whatsapp படத்தைக் கண்டுபிடித்தனர் காவல் அதிகாரிகள். அதில் ஆடவர் தம் கையில் கையில் போதைப் பொருள் பிடித்திருந்தது தெரிந்தது.

படத்தில் இருந்த கைரேகையைக் கொண்டு குற்றவாளியை அடையாளம் கண்டனர் காவல் அதிகாரிகள். அதுவே வேல்ஸ் மாநிலத்தில் இவ்வகையில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் குற்றம்.

காவல்துறையினர், கைது செய்யப்படும் நபர்களின் கைபேசிகளின் மூலம் தற்போது ஆதாரங்களைத் திரட்டி வருகிறார்கள்.

போதைப்பொருள் விற்பனை செய்து வந்த ஆடவர் கைது செய்யப்பட்டவருக்கு Whatsapp குறுந்தகவல்களில் அந்தப் படத்தை அனுப்பி எந்த போதைப்பொருள் வேண்டுமென கேட்டிருந்தார்.

அந்த கையில் இருந்த ரேகையின் சிறு பகுதிகள் போதைப்பொருள் விற்கும் ஆடவரின் அடையாளங்களை கண்டுபிடிக்க உறுதுணையாக இருந்தன.

குற்றவாளிகள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் குற்றங்களில் ஈடுபடும்போது அவர்களைப் பிடிக்க அவர்களுடைய உத்திகளைத் தாங்களும் கையாள வேண்டும் என்கின்றனர் காவல் அதிகாரிகள். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்