Images
  • avengers
    (படம்: Channel NewsAsia)

நோயுற்ற குழந்தைகளுக்கு இன்ப அதிர்ச்சி தந்த Avengers திரைப்படப் பிரபலம்

நோயுற்ற குழந்தைகளின் தைரியத்தைப் பாராட்டும் வகையில் இலாப நோக்கமற்ற Make-A-Wish அமைப்பு ஒரு நிகழ்ச்சியை நடத்தியுள்ளது.

ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டவுனி ஜூனியர் அதில் பங்கேற்று நோயுற்ற சுமார் 40 குழந்தைகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

Avengers: Infinity War எனும் திரைப்படத்தில் Iron Man கதாபாத்திரத்தைச் சித்திரிக்கும் நடிகர் ராபர்ட் டவுனி ஜூனியர் தாம் நடித்திருக்கும் புதிய திரைப்படத்தை விளம்பரம் செய்வதற்காகவும் நோயுடன் போராடும் குழந்தைகளை "Little Avengers" என்று கௌரவிக்கவும் சிங்கப்பூருக்கு வந்துள்ளார்.

Make-A-Wish இலாப நோக்கமற்ற அமைப்பு நோயுற்ற குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக இயங்கி வருகிறது.

"உலக விருப்ப தினத்தை" முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

அவற்றுள் ஒன்று அமைப்பு தொடங்கப்பட்ட நாளாகவும் அனுசரிக்கப்படுகிறது.

Make-A-Wish அமைப்பின் சிங்கப்பூர் கிளை இவ்வாண்டு அதன் 16வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது.

அமைப்பு இதுவரை நோயுற்ற 1,380க்கும் அதிகமான குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றியுள்ளது. 

உங்கள் கருத்து

Top