Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் 3.7 மில்லியன் முறை COVID-19 தடுப்பூசி போடப்பட்டதில் 157 முறை கடுமையான பக்கவிளைவு ஏற்பட்டதாகத் தகவல்

சிங்கப்பூரில் 3.7 மில்லியன் முறை COVID-19 தடுப்பூசி போடப்பட்டதில் 157 முறை கடுமையான பக்கவிளைவு ஏற்பட்டதாகத் தகவல் கிடைத்திருப்பதாய் சுகாதார அறிவியல் ஆணையம் தெரிவித்தது. 

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் 3.7 மில்லியன் முறை COVID-19 தடுப்பூசி போடப்பட்டதில் 157 முறை கடுமையான பக்கவிளைவு ஏற்பட்டதாகத் தகவல்

(கோப்புப் படம்: Jeremy Long)

சிங்கப்பூரில் 3.7 மில்லியன் முறை COVID-19 தடுப்பூசி போடப்பட்டதில் 157 முறை கடுமையான பக்கவிளைவு ஏற்பட்டதாகத் தகவல் கிடைத்திருப்பதாய் சுகாதார அறிவியல் ஆணையம் தெரிவித்தது.

கடந்த மாதம் (மே) 23ஆம் தேதி நிலவரப்படி தடுப்பூசியால் 4,704 முறை பக்கவிளைவு ஏற்பட்டதாகக் கருதப்படுகிறது.

மருத்துவமனையில் சேர்க்கப்படுவது, உடற்குறை, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நோய் போன்றவை கடுமையான பக்கவிளைவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன.

கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானோருக்கு Anaphylaxis எனும் கடும் ஒவ்வாமைப் பிரச்சினை வந்தது.

26 பேருக்கு Anaphylaxis ஒவ்வாமை ஏற்பட்டதாகவும் அதில் 23 பேருக்கு கடுமையான பாதிப்பு இருந்ததாகவும் கூறப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்கள் அணுக்கமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர்களில் பெரும்பாலோர் உடல் நலம் தேறிவிட்டனர் அல்லது தேறிவருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டது.

பொதுவாக COVID-19 தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்குத் தசை வலி, ஊசி போட்ட இடத்தில் வலி, வீக்கம், சோர்வு, காய்ச்சல் போன்றவை ஏற்படும் என்று சுகாதார அறிவியல் ஆணையம் நினைவூட்டியது.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்