Images
  • ninaivil nindrathu

தற்காப்புக்கான கூட்டு உடன்பாடு எட்டப்பட்ட நாள்

16 ஏப்ரல் 1971

1971ஆம் ஆண்டில் பிரிட்டன் சிங்கப்பூரிலிருந்து அதன் இராணுவப் படைகளை முழுமையாக மீட்டுக்கொண்டது. அதனைத் தொடர்ந்து கூட்டுத் தற்காப்பு முறை குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.

பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூஸிலந்து, மலேசியா, சிங்கப்பூர் அகியவை கூட்டுத் தற்காப்பு உடன்பாட்டுக்கு இணங்கின.

உடன்பாட்டின்கீழ், மலாயா தீபகற்பத்துக்கு அல்லது சிங்கப்பூருக்கு எதிராக மிரட்டல் விடுக்கப்படும்போது, நாடுகள் ஒன்றையொன்று கலந்தாலோசிக்கவேண்டும்.

1971ஆம் ஆண்டில் இன்றைய தினம், ஏற்பாடு குறித்த அதிகாரபூர்வ அறிக்கை வெளியானது.


Top