Images
  • mandarin orchard
    படம்:  Google Street View

Mandarin Orchard Singapore நச்சுணவுச் சம்பவங்களின் தொடர்பில் 175 பேர் பாதிப்பு-அதிகாரிகள்

Mandarin Orchard Singapore ஹோட்டலில் நடந்த 4 வெவ்வேறு நிகழ்வுகளில் ஏற்பட்ட நச்சுணவுச் சம்பவங்களின் தொடர்பில் 175 பேர் நோய்வாய்ப்பட்டுள்ளனர்; 9 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து Mandarin Orchard Singapore ஹோட்டலின் முக்கிய விருந்துக் கூடத்தில் வழங்கப்படும் விருந்துணவுச் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

4 வெவ்வேறு நச்சுணவுச் சம்பவங்களும் இம்மாதம் முதல் தேதிக்கும் 3ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சுகாதார அமைச்சு, தேசியச் சுற்றுப்புற அமைப்பு, வேளாண், உணவு, கால்நடை மருத்துவ ஆணையம் ஆகியவை இணைந்து வெளியிட்ட அறிக்கையில் அந்த விவரங்கள் இடம்பெற்றிருந்தன. சம்பவங்களின் தொடர்பில் அமைப்புகள் கூட்டாக விசாரணையைத் தொடங்கியிருக்கின்றன.

175 பேரும் இரைப்பைக் குடலழற்சியால் (gastroenteritis) பாதிக்கப்பட்டிருப்பதாக அறிக்கை குறிப்பிட்டது.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்போரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அறிக்கை தெரிவித்தது.


Top