Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பிரபல நடனக் கலைஞர் திரு மணிமாறன் காலமானார்

சிங்கப்பூரின் பிரபல நடனக்கலைஞரும் சில தமிழ்த் திரைப்படங்களில் நடத்தவருமான திரு. மணிமாறன் துரைசாமி காலமானார்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரின் பிரபல நடனக் கலைஞரும் திரைப்பட நடிகருமான திரு மணிமாறன் துரைசாமி காலமானார்.

அவருக்கு வயது 55.

சிங்கப்பூர் நடன சமூகத்துக்கும் இந்திய நடன சமூகத்துக்கும் பெரும் பங்காற்றிய கலைஞர் அவர்.

படையப்பா, இந்திரா போன்ற திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார் திரு மணிமாறன்.

அவர் இன்று சிங்கப்பூர் நேரப்படி காலை 6 மணிக்குத் தமிழ்நாட்டில் காலமானார்.

2014ம் ஆண்டில், வசந்தத்தின் வாழ்நாள் சாதனையார் விருது அவருக்கு வழங்கப்பட்டது.

கலைத்துறைக்கு அவர் ஆற்றிய பெரும் பங்கை தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் அங்கீகரித்துள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்