Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அரியவகை நோய்களால் பாதிக்கப்படும் பிள்ளைகளுக்கு உதவ தேசிய அளவில் நிதித்திட்டம்?

அரியவகை நோய்களால் பாதிக்கப்படும் பிள்ளைகளுக்கு உதவும் நோக்கத்துடன் தேசிய அளவில் ஒரு நிதித்திட்டம் கொண்டுவரப்படலாம்.

வாசிப்புநேரம் -
அரியவகை நோய்களால் பாதிக்கப்படும் பிள்ளைகளுக்கு உதவ தேசிய அளவில் நிதித்திட்டம்?

ரத்தத்திலுள்ள உயிரணுக்கள். (படம்: Reuters)

அரியவகை நோய்களால் பாதிக்கப்படும் பிள்ளைகளுக்கு உதவும் நோக்கத்துடன் தேசிய அளவில் ஒரு நிதித்திட்டம் கொண்டுவரப்படலாம்.
திரட்டப்படும் நிதிக்கான ஆரம்ப இலக்கு குறைந்தது 200 மில்லியன் வெள்ளியாக இருக்க வேண்டும் என்று Rainbow Across Borders நோயாளி ஆலோசனைக் குழு முன்னுரைத்துள்ளது.

நிதித் திட்டத்தை அரசாங்கம் நிர்வகிக்க வேண்டும் என்றும் அது பரிந்துரைத்தது. சென்ற மாத இறுதியில் அரியவகை நோய் தினம் வந்தது. அதனையொட்டி இந்த ஆண்டுத் தொடக்கத்தில் அரியவகை நோய்குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.

உதவித் தொகை, பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு அவர்கள் வளர்ந்த பிறகும் உதவவேண்டும்; அதற்குக் குறைந்தது 200 மில்லியன் வெள்ளி திரட்டுவது அவசியம் என்று Rainbow Across Borders கூறுகிறது.

சுமார் 700 சிறுவர்களுக்கு அரியவகை நோய்

கல்வி அமைச்சின் பாலர்பள்ளி

{கோப்புப் படம்: CNA}

சிங்கப்பூரில் சுமார் 700 சிறுவர்கள் வரை அரியவகை நோய்களுக்கு ஆளாகியிருப்பதாகக் குழு கணித்துள்ளது. அவர்களுக்கு நீண்டகாலத்திற்கு உதவும் வகையில் நிதித் திட்டம் ஓர் அறக்கட்டளையாக உருவெடுக்க வாய்ப்புண்டு என்றும் அது குறிப்பிட்டது.
சிங்கப்பூரில் மட்டுமே சுமார் மூவாயிரம் பேர் அரியவகை நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்; அவர்கள் அனைவருக்கும் நிதியுதவி கிடைக்கவேண்டும் எனக் குழு பரிந்துரைத்தது.
நிதி சரிவரப் பயன்படுத்தப்படுகிறதா என்பதைக் கவனிக்க அது ஓர் அரசாங்க அமைப்பின்கீழ் செயல்படுத்தப்படுவது முக்கியம் என குழு கூறுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்