Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பொங்கல் கவிதை எழுதி அசத்திய பிள்ளைகள்!

தொடக்கநிலை 5-இல் பயிலும் மாணவர்களுக்குக் கவிதை போட்டி நடத்தப்பட்டது. அதில் வெற்றிபெற்ற மாணவர்களின் விவரங்களும், அவர்களது கவிதைகளும் இதோ...

வாசிப்புநேரம் -

பொங்கலை ஒட்டி மீடியாகார்ப் தமிழ்ச் செய்திப் பிரிவு தொடக்கநிலை மாணவர்களுக்கு போட்டிகளை ஏற்பாடு செய்திருந்தது.

தொடக்கநிலை 5-இல் பயிலும் மாணவர்களுக்குக் கவிதை போட்டி நடத்தப்பட்டது. அதில் வெற்றிபெற்ற மாணவர்களின் விவரங்களும், அவர்களது கவிதைகளும் இதோ....

தரணீதரன்- சீடார் தொடக்கப்பள்ளி (Cedar Primary School)

பிரதீப் - ஸிங்ஹுவா தொடக்கப்பள்ளி (Xinghua Primary School)

சஹானா - அலெக்ஸாண்டிரா தொடக்கப்பள்ளி (Alexandra Primary School)

பிரனித் நிதின் - ஓப்பரா எஸ்டேட் தொடக்கப்பள்ளி (Opera Estate Primary School)

ராம் - டா சியாவ் தொடக்கப்பள்ளி (Da Qiao Primary School)


புத்தாடை உடுத்திப் புதுப் பானையில் பொங்கல் வைத்து
உழவர்கள் கொண்டாடும் உயர்ந்த திருநாளே வருக!

மாட்டுக்கு வண்ணம் இட்டு
மலர்களால் அலங்கரித்து

புத்தாடை அணிந்து வாசலில் கோலமிட்டு
தோரணங்கள் கட்டிக் கரும்புப் பந்தலிட்டு

உழவு இன்றி உலகம் இல்லை
என்ற உண்மை உணருவோம்!

கதிரவனின் கருணைக்கு நன்றி
நன்றி எனக் கூறும் நாளிது!

கரும்பு மென்று கவலை துப்பும்
களிப்புமிகு நாளிது!

ஒன்று சேர்ந்து உண்டிடுவோம்
ஓடி ஆடிப் பாடிடுவோம்!

உழைக்கும் உழவர்களின்
களைப்பைப் போக்கி
களிப்பில் ஆழ்த்தும் திருநாள்!

மிரட்டிவரும் காளைகளை
விரட்டி அடிக்கும் வீரத் திருநாள்!

பழைய எண்ணங்களை அவிழ்த்து
புதிய சிந்தனைகளைப் புகுத்தும்
புதுமையான திருநாள்!

என் உடன்பிறவா தமிழ் மக்கள்
அனைவருக்கும் என் உற்சாகமான
பொங்கல் நல்வாழ்த்துக்கள்! 


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்